பிளஸ் 2 பொது தேர்வுகள் நாளை(மார்ச் 22) நிறைவு பெறுகின்றன.

மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த மாதம், 1ம் தேதி துவங்கியது.

முதலில் மொழி பாடங்களுக்கும், பின் முக்கிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்துள்ளன.

இந்த ஆண்டு தமிழ் தேர்வு எளிதாகவும், ஆங்கிலம், இயற்பியல் தேர்வுகளின் வினாத்தாள்கள் கடினமாகவும் இருந்தன.

பிளஸ் 2 மாணவர்களுக்கான இறுதி தேர்வு நாளை நடக்கிறது.

உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழிற்கல்வி இன்ஜினியரிங் பாடங்கள், அலுவலக மேலாண்மை உள்ளிட்டவற்றுக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இத்துடன், பிளஸ் 2 பொது தேர்வு நிறைவு பெறுகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும், 1ம் தேதி துவங்க உள்ளது.

ஏப்., 13க்குள் மதிப்பீட்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published.