எதிரிகளைக் கொன்று உடலை சமைத்து உண்ணும்
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் க்ளாடியோ லோம்னிட்ஸ், இந்தக் குழுக்களின் குற்றச் செயல்களுக்கு தார்மீக ஆதரவை வழங்க அவர்கள் தங்களுக்கென ஒரு ஆன்மீகக் கட்டமைப்பை வைத்திருப்பதாக நம்புகிறார்.
‘குற்றக் குழுக்களின் அரசியல் இறையியல்’ என்ற தனது புத்தகத்தில், லோம்னிட்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் மத நம்பிக்கைகள் மற்றும் அதிகார அமைப்புகளுடனான அவற்றின் உறவை ஆராய்கிறார்.
குற்றக் குழுக்களின் நரமாமிசம் உண்பதன் பின்னுள்ள அரசியல், மத நம்பிக்கைகளைக் குறித்து லோம்னிட்ஸ் பிபிசி முண்டோவிடம் விவரித்தார்.
“நரமாமிசம் உண்பது என்பது பொது ஒழுக்கத்தின் அடித்தளத்தை மீறுவதாகும்,” என்று அவர் கூறுகிறார்.”அதை விட அருவருப்பான விஷயம் எதுவும் இல்லை,” என்று அவர் கூறுகிறார்.
லோம்னிட்ஸ், கடந்த சில தசாப்தங்களில் மெக்சிகோவின் குற்றக் குழுக்களிடையே நிலவிய பல்வேறு வகையான நரமாமிசம் உண்ணும் பழக்கங்களை ஒரு மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆராய்கிறார்.
மேலும் அந்நாட்டில் செயல்பட்டு வரும் மிகப்பெரும் போதைப்பொருள் விற்பனையாளர்களால் உருவாக்கப்பட்ட சடங்குகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தத்தைத் தேடுகிறார்.