அமைச்சர் உதயநிதி வன்மையாக கண்டிக்கிறேன்.
மத்திய அமைச்சர் ஷோபாவின் விஷமத்தனமான அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், பாஜக அமைச்சர் எப்படி இவ்வளவு அபத்தமான கருத்தை தெரிவித்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பா.ஜ.க.வின் இழிவான பிரித்தாளும் அரசியல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பாஜகவின் கேவலமான கூற்றுகளை தமிழர்களும், கன்னட சகோதர சகோதரிகளும் நிராகரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்ஐஏ இவரையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
நமது மகத்தான தேசத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வெறுப்புப் பேச்சுக்காக அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்