கேரளாவிற்கு கிளம்பும் ரஜினி
விஜய் தற்போது GOAT படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருக்கின்றார். அதைப்போல ரஜினியும் வேட்டையன் படப்பிடிப்பிற்காக நாளை கேரளாவிற்கு கிளம்பவுள்ளார். எனவே விஜய்யும் ரஜினியும் சந்தித்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது
விஜய் தற்போது the greatest of all time என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். தமிழ்நாட்டை போல கேரளாவிலும் விஜய்க்கு செம மாஸ் இருந்து வருகின்றது. அவரது படங்கள் கேரளாவில் சக்கைபோடு போட்டு வருகின்றது. எனவே GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவிற்கு வந்த விஜய்க்கு தடபுடலாக வரவேற்பு கிடைத்தது.
அதை பார்த்த பிறகு இது கேரளாவா இல்லை தமிழ்நாடா ? என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்து வந்தது. அந்த அளவிற்கு விஜய்யை சூழ்ந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதன் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடைசியாக விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தான் கேரளாவில் நடந்தது.