இளையராஜாவாக தனுஷ்
தமிழ் சினிமா ஒட்டுமொத்த ரசிகர்களை தனது இசையால் கட்டி போட்டுள்ளவர் என இசைஞானி இளையராஜாவை சொல்லலாம். பலரின் பயணம், தனிமை, சோகம், சந்தோஷம் உள்ளிட்ட அனைத்திற்கும் இவரின் இசை துணையாக இருந்தது. இருக்கிறது. அப்படியாப்பட்ட லெஜண்டின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. இந்த பயோபிக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது
திரையுலகை பல ஆண்டு காலமாக இசையால் ராஜ்ஜியம் செய்து வருபவர் தான் இளையராஜா. காலம் கடந்தும், வயது வித்தியாசம் இன்றியும் பலராலும் இவரின் இசை தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தளவுக்கு ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்துள்ளார். 80 வயதை கடந்த பின்னரும் இன்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசைஞானி.