மக்களவைத் தேர்தலில் டெபாசிட் தொகை
தமிழகத்தில் 7 தனித்தொகுதிகள் உள்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.25,000 செலுத்த வேண்டும்.
இதே போன்று, தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும்.
தேர்தலில் பதிவாகும் செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறினால் வேட்பாளர் டெபாசிட் இழப்பர்