கரும்புச்சாறு பலன்கள்
* இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளைத் தடுக்கக்கூடிய எதிர்ப்பு பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும் இருக்கிறது.
* தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால், கரும்புச் சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.
* சிலருக்கு பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும். இவர்கள் கரும்புச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது.
* உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்குகிறது.
* கரும்புச்சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது.
* நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்புச்சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
* கல்லீரல் நன்கு செயல்புரிய கரும்புச்சாறு துணைபுரிகிறது.
* கரும்புச்சாறில் உள்ள பொட்டாசியம் வயிற்றில் ஏற்படும் செரிமானப் பிரச்னைகளை சரி செய்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
* சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
* கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்தத் தட்டணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய ரத்த உறைவைத் தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
* விட்டமின் சி அதிகமாக கரும்புச்சாறில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது.
* தாகத்தை குறைத்து, புத்துணர்ச்சி தரும். கரும்புச்சாறை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கினால், செயற்கை பானத்தை விரும்ப மாட்டார்கள்.