பிரதமர் மோடி ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகளுக்கு அனுமதி வழங்கியது யார்!?
குழுந்தைகளை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தது ஏன்?
கோவையில் நேற்று பிரதமரின் ரோடு ஷோவில் அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கலந்துகொண்டது தொடர்பாக பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையில் சிறுவர்கள், குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. இருந்தும் நேற்று நடைபெற்ற பாஜக பரப்புரையில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
