அண்ணாமலை பாஜக தலைவர்.
2026 இல் நாம் அனைவரும் நினைக்கக்கூடிய அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் நிகழும்.
ஒரே மேடையிலே நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அய்யாவோடு ஐயாவை அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையோடு தோட்டத்திற்கு வந்தோம்.
எங்களுக்கு காலை சிற்றுண்டியோடு அன்பையும் பரிமாறினார்கள்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய மூத்த தலைவராக இருக்கப் போகிறார். அவரின் அனுபவம் ஆளுமை திறன் உழைப்பு ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அளவில் வலிமை சேர்க்கும். இப்படிப்பட்ட ஒரு தலைவர் நம் மண்ணிலிருந்து உருவாகி இருக்கின்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கு முழு மரியாதையை கொடுக்க வேண்டியது பாஜகவின் கடமை. அதனை எங்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பார்த்துக் கொள்வார்.