லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு…
தமிழக விவசாயம் முன்னேற்றக் கழகம் பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சங்கம் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது.
விவசாயம் முன்னேற்றக் கழக தலைவர் செல்ல ராஜா மணி கலந்து கொண்டே நிருபர்களிடம் கூறியதாவது பிஎசிஎல் என்ற நிதி நிறுவனம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் 40 ஆயிரம்
கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடு தொகையை பெற்று மோசடி செய்துல்லது .
தமிழகத்தில் ஒரு கோடி முதலீட்டாளர்கள் 10,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்துள்ளனர் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் 2016 இல் பிஏசிஎல் நிறுவனம் முடக்கப்பட்டது அந்த நிறுவனத்தின் சொத்துக்களை ஆறு மாதத்தில் விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கவும் உத்தரவிட்டது. 8 ஆண்டுகள் ஆகி முதலீட்டாளர்களுக்கு அவரது பணம் திரும்ப கிடைக்கவில்லை பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்க வேண்டும் எங்கள் கோரிக்கை ஏற்கும் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் வாக்களிப்போம் கோரிக்கையை ஏற்காவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம்..