மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட மகளிர்கள் பங்கேற்பு
தேசிய மக்கள் நேயம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவும் இணைந்து உலக மகளிர் தின விழாவை கொண்டாடியது. இவ்விழாவில் மாநில மகளிர் அணி தலைவர் மற்றும் சமுதாய அமைப்பாளருமான கண்ணகி மற்றும் காஞ்சிபுர மாவட்டச் செயலாளர் சுஜாதா ஆகிய இருவர்களின் தலைமையில் இவ்விழா கொண்டாடப்பட்டது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய மக்கள் நேயம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் சுந்தரேசன்,தேசிய பொருளாளர் சந்திரன், மாநில தலைவர் ருசேந்திரபாபு,மாநில பொது செயலாளர் ஜீவரத்தினம், மாநில அமைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்,சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து மாலையும் அணிவித்து சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேசிய மக்கள் நேயம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். மற்றும் மகளிர் குழுவை சார்ந்த சமுதாய அமைப்பாளர்கள் சமுதாய வளர் பயிற்றுநர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இவ்விழாவில் பரதநாட்டியம் மற்றும் சிலம்பம், கும்மி பாடல்கள், மேலும் வயது வித்தியாசம் இன்றி மகளிர்கள் நடன திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி புத்தகப்பை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவில் அனைவருக்கும் தின்பண்டங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு இவ்விழா நிறைவு பெற்றது.