பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறப்பு குறைப்பு,
ஏரிகளில்இருந்து உபரிநீர் வீணாக கடலில் கலப்பதால் தண்ணீர் திறப்பை நிறுத்த ஆந்திர அரசுக்கு, தமிழக அதிகாரிகள் கடிதம் எழுதிய நிலையில், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தப்படி கடந்த செப்டம்பர் 27-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததையடுத்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாகியது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும்
செய்தியாளர் ரகுமான்