முத்தமிழ் முருகன் மாநாடு
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பு பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைத்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் 2024ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முத்தமிழ் முருகன் மாநாட்டுக்காக 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.