பேரணிக்கு நிபந்தனைகள் வெளியீடு
பிரதமர் மோடி பேரணிக்கு நிபந்தனைகள் வெளியீடு
தேர்வை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது நீதிபதி கருத்து.
பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்படுவதால் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்து கொள்வார்கள்
மாநிலக் காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர மதரீதியாக பதற்றமான பகுதி என கூறி அனுமதி மறுக்கக்கூடாது.
உரிய பாதுகாப்புடன் நியாயமான கட்டுப்பாடுகளை விதித்து பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும்
பேனர்களை பயன்படுத்தக் கூடாது
பேரணி எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் சுமூகமான முறையில் நடைபெறுவதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்
பிரதமர் செல்லும் பயண தூரத்தை காவல்துறை முடிவு செய்யலாம் என நீதிபதி நிபந்தனை