ரஷ்யாவில் ராணுவ விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து
ரஷ்யாவில் ராணுவ விமானம் திடீரென தீப்பிடித்தில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செவா்னி விமானதளத்திலிருந்து 8 விமானப் பணியாளா்கள் 7 பயணிகளுடன் ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான ஐஐ-76 ரக விமானம் நேற்று புறப்பட்டது. அப்போது அதன் என்ஜினில் தீப்பிடித்ததால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அது அருகிலுள்ள இவானொவோ விமானதளத்தின் ஓடுபாதையை நோக்கி செலுத்தப்பட்டது. தரையிறங்க முயற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.