இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய அஷ்வின், 870 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்
மற்றொரு இந்திய வீரரான பும்ரா ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்
ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்