சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன்

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ
இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 1/2 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 8 அவுண்ஸ்
சோயா சாஸ் -1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 கையளவு
ஆயில் – தேவையான அளவு.

ஊற வைப்பதற்கு

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 1/2 டீஸ்பூன்
முட்டை – (வெள்ளைக்கரு மட்டும்)
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின்பு சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வைத்து இறக்கினால் டிராகன் சிக்கன் தயார்.

Leave a Reply

Your email address will not be published.