திருமங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த பண்ணை பள்ளி
லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய பண்ணைப்பள்ளி நடந்தது. வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.திருச்சி மாவட்டம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் லால்குடி வட்டாரம் திருமங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய பண்ணை பள்ளி நடைபெற்றது பண்ணைப் பள்ளியில் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் அவர்கள் பேசுகையில் பாரம்பரிய நெல் ரகங்கள் முக்கியத்துவங்கள் குறித்து விரிவாக விளக்கி கூறினார்.