குழந்தைகள் நன்றாக படிக்க விநாயகர் வழிபாடு

குழந்தை நன்றாக படிக்க நாளைய தினம் உங்கள் குழந்தையை கூட்டிக்கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். இப்படி பிள்ளையார் கோவிலுக்கு போகும் போது உங்களுடைய பிள்ளையின் கையால் அருகம்புல்லை வாங்கிக் கொண்டு போய் பிள்ளையாருக்கு கொடுக்க வேண்டும். கடையிலிருந்து காசு கொடுத்து அருகம்புள்ளை நீங்க வாங்கிருங்க. வாங்கி அருகம்புல்லை உங்கள் பிள்ளைகளின் கையில் கொடுங்க. உங்க குழந்தையே அந்த அருகம்புல்லை தன் கையால் கொண்டு போய் பிள்ளையாருக்கு கொடுக்கணும். அதாவது அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகர் கையில் கொடுக்க வேண்டும். இன்னும் சிறப்பாக சொல்ல போனால், அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையார், அல்லது உங்க வீட்டு தெரு முனையில் வைத்திருக்கக்கூடிய பிள்ளையார், அல்லது உங்க அப்பார்ட்மெண்டிலேயே பிள்ளையார் இருந்தால், உங்கள் குழந்தையின் கையாலேயே இந்த அருகம்புல்லை பிள்ளையாருக்கு சூட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published.