1000 ரூபாய் பிச்சை என கூறிய குஷ்பு
பெண்களுக்கு தமிழகஅரசு வழங்கும் 1000 ரூபாய் பிச்சை என கூறிய குஷ்பு, தன் கருத்து பற்றி விளக்கம்
நடிகை குஷ்பு தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில்,
1982-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவை முரசொலி மாறன் ‘பிச்சை’ எனக் குறிப்பிட்டார். ஆனால், அதை யாரும் கண்டித்ததாக நான் பார்க்கவில்லை.
ஓசியில்தான் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்னபோதோ, உயர் நீதிமன்ற மதுரை கிளை கலைஞர் போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு சொன்னபோதோ நீங்கள் அனைவரும் பார்வையற்றவர்களாகவும், வாய்பேசமுடியாதவர்களாகவும், காது கேளாதவர்களாகவும் இருந்தீர்களா?
போதைப்பொருள் நடமாட்டத்தை நிறுத்துங்கள், டாஸ்மாக்கிலிருந்து உங்கள் கமிஷனை குறைக்க வேண்டும் எனக் கூறுகிறேன். டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தைச் சேமிக்க நமது பெண்களுக்கு உதவுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை விட மதுப்பிரியர்களால் அந்தப் பெண்கள் படும் வேதனை அதிகம். பெண்களைச் சுதந்திரமாக ஆக்குங்கள், அவர்களுக்கு உங்கள் ரூ.1000 தேவையில்லை. கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு அவர்களே சேமிப்பார்கள்.
ஆனால், உங்கள் அடுத்த 14 தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தி.மு.க-வுக்குப் பணம் தேவை என்று நினைக்கிறேன். உங்கள் பொய்ப் பிரசாரத்தை தொடருங்கள், ஏனென்றால் நீங்கள் தமிழ்நாட்டில் தோல்வியடைந்ததை நிரூபிக்க அதுதான் ஒரே வழி ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்