எஸ்பிஐ-க்கு கால அவகாசம் தர முடியாது
தேர்தல் பத்திர வழக்கில் அவகாசம் கேட்ட எஸ்பிஐ கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்துள்ளது.
நாளை மாலைக்குள் தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார் என்ற விவரங்களை வெளியிடுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த விவரங்களை மார்ச் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் எஸ்பிஐ-யிடம் சிறிது நேர்மையை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.