திருச்சூரில் வரவேற்க ஆள் இல்லை
பயங்கர அப்செட் ஆன சுரேஷ் கோபி
“நீங்கள் என்ன செய்து கொண்டி ருக்கிறீர்கள்? இப்படி இருந்தால் நாளை திருவனந்தபுரம் சென்றுவிடு வேன்” என்று பெண் ஊழியர்களிடம் பாஜக திருச்சூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சுரேஷ் கோபி வசைபாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது
கேரளத்தில் உள்ள திருச்சூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக திரைப்படக் கலைஞர் சுரேஷ்கோபி போட்டியிடுகிறார்.கடந்த சனியன்று (மார்ச் 9) இங்குள்ள புதுக்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிகுளங்கரை சாஸ்தாம்புவம் பகுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுரேஷ் கோபியை வர வேற்பதற்கு ஊழியர்கள் இல்லாத தால் எரிச்சல் அடைந்தார்.
“நான் மக்களை அணுக முடியாத இடத்திற்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்? வாக்குச் சாவடியின் பங்கு என்ன, அதன் தலைவரின் பங்கு என்ன, நான் ஏன் இங்கு அழைத்து வரப்பட்டேன்? நான் ஓட்டு வாங்க வேண்டுமானால், வாக்காளர்கள் இருக்க வேண்டாமா? இப்படி இருந்தால் நாளை திருவனந்தபுரம் சென்றுவிடுவேன். அங்கே ராஜீவ் சந்திரசேகரனுக்கு வேலை செய் வேன்” என்று சுரேஷ் கோபி காரை விட்டு இறங்காமல் கூச்சலிட்டார்
இப்படி நடக்காமல் இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பெண்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சுரேஷ் கோபியின் முன் கை கூப்பி நின்றனர். இந்த காட்சி சமூக ஊட கங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது