திமுக தொண்டர்களுக்கு அறிக்கை

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அறிக்கை:

நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது மத்திய அரசில் நடக்கும்.

மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும்.

வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும்.

பத்தாண்டு கால பாஜக ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

3 ஆண்டு கால திமுக ஆட்சி தமிழ்நாட்டுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள்.

இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை மக்களுக்கு உணர்த்துங்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும், ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்’ என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.

பத்தாண்டு காலத்துக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அவசரகாலப் பதற்றமானது பிரதமர் மோடியின் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது.

‘மீண்டும் மோடி’ என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், “வேண்டாம் மோடி” என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் இன்று எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது- முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published.