சிவன் ஆலயம் கண்டுபிடிப்பு
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் ஆலயம் கண்டுபிடிப்பு
திருவெறும்பூர் அருகே உள்ள கும்ப குடி கிராமத்தில் பத்தாம் நூற்றாண்டு பழமையான சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது
திருவெறும்பு அருகே கும்ப குடியில் சிவனாலயம் சிதைந்த நிலையில் புதர் மண்டி கிடந்தது கிராம மக்களுடன் சேர்ந்து சிவ வழிபாட்டு குழுவினர் இடிபாடுகளை ஒழுங்குபடுத்தி சிவாலயத்தை மீட்டுள்ளனர் சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர் திருவெறும்பூர் அருகே உள்ள எச் இ பி எப் தொழிற்சாலையில் பணிபுரியும் தனசேகர் என்பவர் கொம்பங்குடியில் கண்டறியப்பட்ட பழமையான சிவாலயம் குறித்து ஆற்றுப்படை வரலாற்று அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார்