சிவராத்திரி
மோட்சம்: மகா சிவராத்திரி நாளில், 3-ம் காலத்தில் ஈசனை வழிபட்டால் பாவங்கள் நம்மை விட்டுவிலகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது வழக்கமான ஐதீகமாக உள்ளது..
அந்த வகையில் இந்தியா முழுவதுமுள்ள சிவாலயங்களில் நேற்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மகா சிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிவராத்திரி: கோவையை பொறுத்தவரை, ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் நேற்றைய தினமும் கோலாகலமாக துவங்கியது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி ஈஷா யோகா மையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதிலும் பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி மனைவி சுதேஷ் தன்கர், திரிபுரா கவர்னர் இந்திர சேனா ரெட்டி, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் எல் முருகன், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேக்றறனர்