வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா
இந்தியா, இங்கிலாந்து இடையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடைசி டெஸ்டில், ரோஹித் செம்ம சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிட்ச், பேட்டர் மற்றும் பௌலர்களுக்கு இடையில் செம்ம போட்டியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.
இங்கிலாந்து அணி ஓபனர்கள் ஜாக் கிரோலி, பென் டக்கட் இருவரும் கடந்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் 50+ பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், தற்போது 5ஆவது டெஸ்டிலும் 50+ பார்ட்னர்ஷிப்பை அமைத்து அசத்தினர்.