திருவள்ளூர் ஆன்லைன் மோசடி
புழலில் ஜெய்சங்கர் (33) என்பவரிடம் சேவை மைய அதிகாரி என பேசி கிரெடிட் கார்டில் இருந்து நூதன முறையில் ரூ.69,816 மோசடி செய்துள்ளனர். கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி ஓடிபி-ஐ கேட்டு நூதன முறையில் மோசடி செய்தனர். ஜெய்சங்கர் புகாரின் பேரில் புழல் போலீசார் 2பிரிவுகளில் வழக்கு பதிந்து ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.