திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாநில நெடுஞ்சாலையில் உள்ள தாழவேடு காலனியில் பெட்ரோல் பங்கில் 5 இளைஞர்கள் நான்கு பட்டாக்கத்திகள் உடன் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் பங்கில் இலவச பெட்ரோல் மற்றும் பணம் கேட்டு பெட்ரோல் பங்க் நடத்தும் நபருக்கு போனில் மிரட்டல் விடுத்தனர். பட்டப்பகலில் மிரட்டி சென்றுள்ளனர். இது குறித்து திருத்தணி போலீசார் கஞ்சா போதையுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் உள்பட நான்கு இளைஞரை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.