ஆரஞ்சு பழ தோல் ஊறுகாய் செய்முறை
தேவையான பொருட்கள் பொடியாக நறுக்கிய ஆரஞ்ச் பழத்தோல் – ஒரு கப் மிளகாய் தூள் – 3 டீஸ்பூன் புளி – ஒரு ஆரஞ்சு பழ அளவு வெல்லம் – 1/2 கப் நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு வர மிளகாய் – 2 கருவேப்பிலை – 2 இனுக்கு
செய்முறை
முதலில் ஆரஞ்சு பழத்தோலை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அதில் மிளகாய் தூளையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இது கொதிக்க ஆரம்பித்த பிறகு இதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்க வைத்திருக்கும் ஆரஞ்சு பழ தோலையும் சேர்த்து 15 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும். பிறகு பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்துவிட்டு பிறகு இறக்கி வைத்து விட வேண்டும். தாளிப்பதற்கு ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி வெந்தயம், பெருங்காயம், வரமிளகாய், கருவேப்பிலை இவற்றை சேர்த்து இவை அனைத்தும் நன்றாக பொரிந்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஆரஞ்சு பழத்தோல் ஊறுகாயில் தாளித்ததை போட்டு விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சுவையான ஆரஞ்சு பழ தோல் ஊறுகாய் தயார் ஆகிவிட்டது. இதை அப்படியே ஒரு வாரம் வரை வைத்திருந்து பிறகு உபயோகப்படுத்தும் பொழுது இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.