திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனையில் 1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியுடன் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 44 கிலோ துவரம் பருப்பு, 30 லிட்டர் பாமாயில் பறிமுதல் செய்யப்பட்டது. 2 வாகனங்கள், 6 பேரை கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.