காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தினந்தோறும் தாமதமாக வருவதைக் கண்டித்து காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 6.15 மணிக்கு வரவேண்டிய திருமால்பூர்- சென்னை கடற்கரை ரயில் ஒரு மணி நேரம் தாமதம் என புகார் தெரிவித்துள்ளனர். காலை 6.15 மணிக்கு வரவேண்டிய ரயில் 7.15 மணிக்கு வந்ததால் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.