அஞ்சலக திட்டங்களில் முதலீடு அதிகரிப்பு.
மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களில் செய்யப்படும் முதலீடு அதிகரித்திருப்பது தெரிய வந்து
உள்ளது.
அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள், சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.
இவற்றில் ஓய்வூதியதாரர்களால் அதிகம் நாடப்படும் மூத்த குடிமகன் சேமிப்பு திட்டத்தில், 90,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இணையான காலத்தை விட 37,000 கோடி அதிகம்.
இதே போல, மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிருக்கான சேமிப்பு திட்டத்தில் இதுவரை 19,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகியவற்றுக்கான முதலீடு வரம்பு உயர்த்தப்பட்டது, இதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.
மூத்த குடிமகன் சேமிப்பு திட்ட வரம்பு 30 லட்சமாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. மாதாந்திர வருமானம் திட்ட வரம்பு தனி கணக்கிற்கு 9 லட்சமாக மற்றும் இணை கணக்கிற்கு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.