பாய் வீட்டு பிரியாணி மசாலா அரைக்கும் முறை
பாய் வீட்டு பிரியாணி மசாலா அரைக்கும் முறை இந்த பிரியாணி மசாலா செய்ய நமக்கு மூன்றே பொருள் தான் தேவை. அது பட்டை கிராம்பு ஏலக்காய் இவைகள் தான். இவற்றை வாங்கும் போதே தரமானதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஏலக்காயில் விதைகள் அதிகமாக இருப்பதாக வாங்க வேண்டும். அதே போல் பட்டையும் சாயம் பூசியது தற்போது விற்பனையில் உள்ளது. அதை வாங்கும் போதே சரி பார்த்து வாங்குங்கள். கிராம்பின் மேலே இருக்கும் கொம்பு போன்ற பகுதி உடையாமல் இருப்பதாக பார்த்து வாங்குங்கள். இவற்றையெல்லாம் தரமாக பார்த்து வாங்கினாலே சுவை பிரமாதமாக இருக்கும்.
மசாலா பொருட்களின் அளவு கிராம்பு – 20 கிராம், ஏலக்காய் – 30, கிராம் பட்டை 50 கிராம். இதில் முதலில் ஏலக்காவை போட்டு அத்துடன் ஒன்னரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்ப்பதன் மூலம் ஏலக்காய் நன்றாக அரைபடுவதுடன், சர்க்கரை சுவையுடன் சேர்க்கும் போது பிரியாணியும் நன்றாக இருக்கும். ஏலக்காவை நல்ல ஃபைன் பவுடராக அரைக்க வேண்டும்.