பாக். செனட் சபையில் தீர்மானம் தாக்கல்
இதுதொடர்பாக பாகிஸ்தான் செனட் சபையில் செனட் உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், “சமூக ஊடகங்கள் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீர்குலைக்கின்றன. பாகிஸ்தான் ஆயுத படைகளுக்கு எதிராக, தீங்கிழைக்கும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. நமது மதம், கலாச்சாரத்துக்கு எதிரான கருத்துகளை பரப்ப, நாட்டின் நலன்களுக்கு எதிராக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இளம் தலைமுறையை பேரழிவில் இருந்து காப்பாற்ற ஃபேஸ்புக், டிக்டாக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களையும் தடை செய்யும்படி அரசாங்கத்துக்கு செனட் சபை பரிந்துரைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார். இந்த தீர்மானம் மீது நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது.