ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக மாற்றி அறிவித்தது மத்திய அரசு!
அம்பானி குடும்ப நிகழ்ச்சிக்காக, குஜராத் – ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக மாற்றி அறிவித்தது மத்திய அரசு!
அம்பானி வீட்டின் திருமண நிகழ்ச்சி குஜராத் ஜாம்நகரில் நடைபெறுவதால், பிற நாடுகளில் இருந்து முக்கிய பிரமூகர்கள் வருவார்கள் என்பதால் ’10 நாட்களுக்கு’ சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!
இதற்காக மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை விமான நிலையத்தில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன
இந்திய விமானப்படையும் அதன் முக்கியமான தொழில்நுட்ப பகுதிகளில் விமானங்களை தரையிறக்க அனுமதி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மேலும் அம்பானி குடும்ப விருந்தினர்களுக்கு உதவியாக, ஜாம்நகர் விமான நிலையத்தின் பயணிகள் கட்டிடத்தின் பரப்பளவை 475 சதுர மீட்டரிலிருந்து 900 சதுர மீட்டராக மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது
வழக்கமாக ஜாம்நகர் விமான நிலையத்தில் தினசரி 6 விமானங்கள் மட்டும் தரையிரங்கி வந்த நிலையில் நேற்று (01/03/2024) மட்டும் 140 விமானங்கள் தரையிரங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது