Mutual Fund: முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க செபி அதிரடி நடவடிக்கை
ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகளில் மதிப்பு உயர்ந்து ரிஸ்க் அதிகமாக இருப்பதால், ஸ்மால்கேப், மிட்கேப் ஃபண்டுகளில் எச்சரிக்கையுடன் முதலீடு செய்யும்படி ஏற்கெனவே சில மாதங்களாக நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். ஆனால், ஸ்மால்கேப் பங்குகளின் வளர்ச்சி நிற்கவில்லை. மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டேதான் போகின்றன.
ஒருபுறம் பங்குகளின் மதிப்பு நியாயமான வரம்புகளைத் தாண்டி உயர்ந்துகொண்டே போக, ஃபண்டுகளில் பணம் குவிந்துகொண்டே இருந்தன. இதனால், ஃபண்ட் மேனேஜர்களும் முடிவுகளை எடுப்பது கடினமானது.