தவிர்க்க முடியாத கம்ப்யூட்டர் பயன்பாடுவறண்டுபோகும் கண்கள்
சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 15 முறை நாம் கண்களை இமைக்கிறோம். ஆனால், கம்ப்யூட்டர் திரையைப் பார்க்கும்போது அதை மறந்துவிடுகிறோம்.
இன்றைய சூழலில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்க முடியாது. இதனால் கண்கள் வறண்டு போகும் (Dry Eyes) பாதிப்பு வருகிறது. இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வு என்ன?
கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது வசதியாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். வெளிச்சமானது நேரடியாக கம்ப்யூட்டரில் படாமல், உங்களுக்குப் பின்னாலிருந்து வரும்படி பார்த்துக்கொள்ளவும். கம்ப்யூட்டர் உபயோகிக்கும்போது அதில் வெளியிலிருந்து வெளிச்சம் விழாதபடி வைத்துக்கொள்ளவும்.
20:20:20 விதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொரு 20 நிமிடங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தியதும் 20 அடிகள் தொலைவிலுள்ள காட்சிகளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும் என்பதே இந்த விதி.
கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்குக் கண்களில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் பார்வை தொடர்பான பாதிப்புகள் உள்ளனவா என மருத்துவரிடம் செக் செய்யவும். பார்வை பாதிப்புகள் இருந்தால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவும். கண்ணாடி தேவை என்றால் அணியவும்.