பலன்களை அள்ளி தரும் அதிமதுரம்
அதிமதுரம் ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருளாகும். இந்த அதிமதுரம் வேர் இனிப்பு சுவையுடையது, நல்ல வாசனையாக இருக்கும், இந்த அதிமதுரம் (licorice) வேர் நல்ல குளிர்ச்சி தன்மையுடையது. இந்த அதிமதுரம், அனைத்து ஆயுர்வேதம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த மூலிகை செடி. இந்த அற்புத மருத்துவ குணங்கள் வாய்ந்த அதிமதுரம் (licorice பொடி) நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராடி அழிக்கும் சக்தியுடையது.
கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ஏற்படும் உதிரப் போக்கு பிரச்சனைகளுக்கு அதிமதுரம் (licorice benefits) ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
எனவே கருவுற்ற பெண்கள் அதிமதுரம் (licorice powder) மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.