4 நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 27.02.2024 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 6.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டப்படவுள்ள 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் 40 எண்ணிக்கையிலான மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் மற்றும் 27.50 கோடி ரூபாய் மதிப்பிலான 6 வட்ட செயல்முறை கிடங்குகள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
மிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2 வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் 4 நிலையங்களை திறந்து வைத்தல் நிரந்தர நேரடி நெல்கொள்முதல்
தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பினை வட்ட அளவில் உறுதி செய்யவும், பொது விநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான தானியங்களின் சேமிப்பிற்கான கொள்ளளவினை மேம்படுத்தும் விதமாகவும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டத்தில் 4.02 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தில் 2.65 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன், மொத்தம் 6.67 கோடி ரூபாய் செலவிலான 4000 மெ.டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள 2 வட்ட செயல்முறைக் கிடங்குகள்: செங்கல்பட்டு மாவட்டம் தொன்னாடு, காஞ்சிபுரம் மாவட்டம் மருதம், திண்டுக்கல் மாவட்டம் – சித்தரேவு மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் உஞ்சியவிடுதி ஆகிய கிராமங்களில் தலா 250 மெ.டன் கொள்ளளவுடன் மொத்தம் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்; என மொத்தம் 9 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.