மொறு மொறு கார போண்டா செய்யலாம்
உங்க வீட்ல இட்லி மாவு இருக்கா… அப்போ வாங்க மொறு மொறு கார போண்டா செய்யலாம் சிலர் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களில் போட்டு பொரித்த போண்டா வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் கடைகளில் கிடைக்கும் போண்டாக்களை வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று நீங்கள் யோசித்தீர்கள் என்றால் உங்களுக்காக தான் இந்த ரெசிபியே…
தேவையான பொருட்கள்:
- இட்லி மாவு – 2 கப்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- ரவை – 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 1/4 கப்
- பூண்டு – 2 சிறிய பல்
- காய்ந்த மிளகாய் – 3
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- சீரகம் – 1/4 டீஸ்பூன்
- நறுக்கிய கறிவேப்பிலை
- முதலில் தேவைவையான காய்ந்த மிளகாயை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து சிறிதளவு தண்ணீருடன் நன்றாக மசிய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து கொள்ளுங்கள்.
- பிறகு அதில் அரிசிமாவு மற்றும் ரவை நன்றாக கலந்துவிட்டு 10 நிமிடங்களுக்கு மூடி போட்டு ஊறவிடவும்.
- அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக பொரியவிடவும்.
- பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
- பிறகு அத்தை கலந்துவைத்துள்ள மாவில் போட்டு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
- அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து போண்டா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் தீயை குறைத்து கலந்தது வைத்துள்ள மாவை கொண்டு தேவையான அளவிற்கு ஏற்ப போண்டாவை போடவும்.
- மாவு ஓரளவிற்கு உப்பி எண்ணெய் மேல் மிதந்து வந்தததும் அதை திருப்பி போட்டு வேகவிடவும்.
- போண்டா நன்றாக பொன்னிறமாக வெந்து மொறு மொறுவென்று ஆனவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்தால் காரசாரமான இட்லி மாவு போண்டா ரெடி……..