இந்த 2 பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட ஒன்றாக சாப்பிட்டு விடக்கூடாது.

உணவே மருந்து. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, என்று சாப்பாட்டில் கூட சில கட்டுப்பாடுகளை நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். சரியான சாப்பாடு இல்லை என்றால் நிச்சயமாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியாது. எப்போதுமே ருசிக்காக சாப்பிடக்கூடாது. பசிக்காக சாப்பிட வேண்டும் என்றும் சொல்லுவார்கள். அந்த பசிக்காக கூட சில பொருட்களை ஒன்றாக சேர்த்து நாம் சாப்பிட்டு விடக்கூடாது. அது நம்முடைய உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  விஷமாக மாறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்தெந்த உணவு பொருட்களை, எந்தெந்த உணவு பொருட்களோடு சேர்த்து சாப்பிடவே கூடாது என்ற ஆரோக்கியம் சார்ந்த சில பயனுள்ள தகவல்கள் இதோ உங்களுக்காக.

மீனுடன் சேர்த்து பால் தயிர் மோர் இந்த பொருட்களை சாப்பிடவே கூடாது. இது அஜீரணக் கோளாறு கொடுப்பதோடு சேர்த்து வெண்மேகம் என்று சொல்லப்படும் தோல் பிரச்சனை உண்டாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. கூடுமானவரை எந்த அசைவ சாப்பாடு சாப்பிட்ட பின்பும் பால் தயிர் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published.