தினமொரு பயனுள்ள தகவல்
சமூகப்பற்றாளன் ஞானசித்தனின்
தினமொரு பயனுள்ள தகவல்
🌹 விஷத்தை கக்கி
மனிதனை கொல்லும்
கெட்டதை செய்யும்
பாம்புக்கு பெயர்
நல்ல பாம்பு என்பது போல வாட்ஸ்அப் குழுவின் பெயர்கள்
தமிழகத்தில் பெரும்பாலும் ஜாதி மதத்தை சார்ந்தே இயங்கி வருகிறது…
ஆனால் என்னிடத்தில் ஜாதி மதம் சார்ந்த வாட்ஸ் அப் குழுக்கள் ஒன்று கூட இருக்காது அப்படியே என்னை சேர்த்தாலும் அதில் இருந்து நான் விலகி விடுவேன் காரணம்
நாடு நாசமாய் போக
இது போன்ற உணர்ச்சிகளே முக்கிய காரணம்…
🌹 ஏழை பணக்காரன், ஆண்டி அரசன் யாராக இருந்தாலும் 10 மாதம் மட்டுமே கர்ப்ப காலம் என்பதை அவரவர் மனதில் பதிய வைக்க வேண்டும் *அய்யன் திருவள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மனதில் பசுமரத்து ஆணியாக பதிய வைத்து மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்பதே *சமூகப்பற்றாளன் ஞானச்சித்தனின் எனது அன்பான வேண்டுகோள்* ஆகும்.!!!
🌹 சினிமா
செய்திகளுக்கு மட்டுமே
முன்னுரிமை தரும்
தரமில்லாத ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், தனியார் தொலைக்காட்சிகள், தொழில் தர்மம் இல்லாத மாத இதழ்கள் பத்திரிகைகள்,
சமூக அக்கறை இல்லாத நிருபர்கள்…
.. இப்படி ஜாதி மதத்தை உயர்வாக எண்ணி சிந்தனை செய்யாமல் செம்மறி ஆடு கூட்டம் போல மந்தையாக வாழும் மக்கள்
உள்ள வரை
கலாம் அய்யாவின் வல்லரசு
கனவு என்பது கானல் நீரே.
🌹 சினிமா செய்திகள் இல்லாத பத்திரிகைகள் இன்று அதிகம் இல்லை… பத்திரிக்கை என்பது
பயணத்தின் போது சண்டித்தனம் செய்யும் ஒரு மாட்டை அடிப்பதற்கு பயன்படும் சாட்டை போன்றது ஆகும்.!!!
அதிகாரத்தில் உள்ளவர்கள்,
செல்வாக்கு மிக்க சீமான்கள்,
அட்டகாசம் செய்யும் ரெளடிகள்,
அநியாயம் செய்யும் வணிகர்கள்
போன்றவர்கள் தவறு செய்யும் போது நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று பத்திரிக்கையானது
தொழில் தர்மத்தை கடைப்பிடித்து செயல்பட வேண்டும்…
என்பதே எனது ஆதங்கமாகும்…
🌹 ஒரு பசுவின் கன்றை கொன்றதற்காக தனது மகனையே தேர் சக்கரத்தில் பலி கொடுத்த மனுநீதிச்சோழன் வாழ்ந்த மண்ணில்….
ஒவ்வொரு கட்சிக்கும்
ஒவ்வொரு தனித்தனி பத்திரிக்கை,
ஒவ்வொரு கட்சிக்கும்
ஒவ்வொரு தனித்தனியான டிவி சேனல்கள்…
அந்தந்த பத்திரிக்கையிலும்,
அந்தந்த டிவி சேனல்களிலும்
அவர்களின் சுயபுராணம் மட்டுமே இருபத்தி நான்கு மணி நேரமும் சளைக்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறது….
🌹 ஒரு டிவியில் ஒருவரை வானளவு புகழ்கிறார்கள் மற்றொரு டிவியில் அதே நபரை அடிமட்டம் வரை சென்று இகழ்கிறார்கள் அண்ணன் வைகைப்புயல்
வடிவேலு பாணியில் சொல்லப்போனால்
அவர்களுக்கு வந்தால் இரத்தம் அதுவே பிறருக்கு வந்தால் அது தக்காளி சட்னி.. என்பது போல செய்திகள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது..
🌹 சுதேசி மித்ரன், ஹிந்து, திராவிடன் போன்ற பத்திரிக்கைகள்தான் நம் நாட்டு மக்களின் மனதில் விடுதலை உணர்வுக்கு வித்திட்டது…
அதேப்போல
எம்.ஜி.ஆர் சினிமாவை கையாண்ட விதமானது சமூக மேன்மைக்கு பெரிதும் உதவியது
எம்ஜிஆர் படத்தை பார்த்து நான் குடிக்கவில்லை, பெண்களை இழிவாக நடத்துவதில்லை, தாயே தெய்வமாக நான் வணங்குகிறேன் என்று பல பேர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்..
🌹 சரி நண்பர்களே இன்றைய தகவலுக்கு நான் வருகின்றேன்…
புதியதாக ஒரு
கட்டிடத்தை கட்டும் போது
கொத்தனார் தனது கையில் பல்வேறு பொருட்களை வைத்திருப்பார் அதில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது நூல்கண்டு ஆகும்….
நூலைக்கொண்டு
கட்டிடம் கட்டும் போது
கட்டிடமானது நேராக நிமிர்ந்து வானத்தை தொடுவது போல கம்பீரமாக காட்சியளிக்கும்..!!!
📚அதுபோல மனதை நெறிப்படுத்தி,
வாழ்வை முறைப்படுத்தி, சாதாரண மனிதரையும்
சாதிக்க வைக்கும் சர்வ வல்லமை படைக்கும் சக்தி நாம் படிக்கும் திருக்குறள், நைடதம், ஆத்திச்சூடி, அக்னி சிறகுகள், சத்திய சோதனை, அர்த்தமுள்ள இந்து மதம் ,You can do போன்ற
நல்ல நூல்களுக்கு உண்டு.
📖நல்ல மகசூல் கிடைக்க
நல்ல வயல்வெளி தேவை,
அதுபோல நல்ல புத்தகம்
உருவாக அச்சகம் தேவை..!!!
📚அச்சகம் என்ற உடனே என் நினைவுக்கு வருவது தஞ்சாவூரில் உள்ள பர்மா காலனி அருகே உள்ள அச்சகம் ஆகும்.
ஆம்..
தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் நான் இளங்கலை விலங்கியல் படித்த போது நானும் எனது நண்பன் மேல்கோட்டையூர் அன்பழகன் அவர்களும் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் சம்பளத்தில் பர்மா காலனியில் இருந்த அச்சகத்தில் படித்துக்கொண்டே பகுதி நேர வேலை செய்தோம்.!!!
📚பெற்றோர்களுக்கு
சுமையாக இல்லாமல்
படிப்பையும் பார்த்துக்கொண்டு,
பகுதி நேர வேலையும் பார்த்துக்கொண்டு,
விடா முயற்சி செய்ததன் பலனாக
இன்று இறைவன் அருளால் இருவரும் கிராமத்திலிருந்து பிறந்து வளர்ந்து சென்னையில் வாழும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறோம்.!!!
🌹இந்த நிலைக்கு நான் வருவதற்கு எனது பெற்றோர்களும், எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும், எனது நண்பர்களும், எனது உறவினர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்..
📖 சரி நண்பர்களே
இன்றைய பயனுள்ள தகவலுக்கு நான் வருகிறேன்
பிப்ரவரி – 23 – ஆம் தேதியான இன்று தமிழகத்தில் தரங்கம்பாடியில்
அச்சு எந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த
சீகன் பால்கு நினைவு தினமாகும்.!!!
🌹 இன்றைய பயனுள்ள தகவலாக சீகன் பால்கு அவர்களின் வாழ்க்கை வரலாறு பின்வருமாறு.!!!
📚 இவரது சீரிய முயற்சியால்தான் ஆசிய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலாக பைபிள் மொழிப் பெயர்க்கப்பட்டு அச்சேறியது.!!! என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரிய பெருமையாகும்.
📚புயல் மையம்
கொண்டால் மழை மண்ணில் உண்டு என்பதைப்போல
ஆங்கிலேயர் ஆட்சி குறித்து நமக்குப் பல கசப்பான நினைவுகள் இருந்தாலும் வரலாற்றுரீதியாக சில முக்கியமான மாற்றங்கள் மறக்கமுடியாதவை; மறக்கக்கூடாதவை.
📖கல்வியை அனைவருக்கும் பொதுவாக்கியது, நவீன வசதிகளை அறிமுகப்படுத்தியது எனப் பலவற்றைப் பட்டியலிடலாம். அதில் முக்கியமானது ஐரோப்பிய பாதிரியார்கள் சிலரின் தமிழ்த்தொண்டு. வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஜி.யு. போப், கால்டு வெல் ஆகியோர் வரிசையில் முக்கியமானவர் பாதிரியார் சீகன் பால்கு. இவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர்.
📚சிறுவயதில் இருந்தே நோய் வாய்பபட்டு நோஞ்சான் போலத்தான் சீகன் பால்கு இருப்பாராம். சீகனின் தாய் மிகுந்த இறைப்பற்று கொண்டவர். அதே இறைப்பற்று சீகனிடம் இருந்தது. பைபிளைக் கற்றுத் தேர்ந்தார் சீகன். பாதிரியார்கள் இந்தியாவுக்கு வந்து பணியாற்றுவதில் பலவித இடையூறுகள் அப்போது இருந்தன.
📖அப்படி சீகனுக்கும் சில இடையூறுகள் இருந்தன. டென்மார்க் அரசரால், இறை சேவைக்காக சீகன் அனுப்பப்படுவதை, இந்தியாவில் இருந்த டானிஷ் கவர்னர் ஹாசியஸ் விரும்பவில்லை. தமது செயல்பாடுகளை வேவு பார்க்கவே சீகனை டென்மார்க் அரசர் அனுப்புவதாக கவர்னர் கருதினார். 1705ம் ஆண்டு தமிழகத்தில் தரங்கம்பாடி பகுதிக்கு சீகன் கப்பலில்வந்தடைந்தார். ஆனால், அவர் கரை வந்து சேர படகு அனுப்பப்படவில்லை
📚ஏற்கெனவே கடலில் பலவித போராட்டங்களைப் பார்த்து பார்த்து சீகன் நொந்து போயிருந்தார். கடல் பயணத்தின்போது இறந்து போனவர்களின் சடலங்களைக் கடலில் வீசும் காட்சிகளைக் கண்டு பயந்து போயிருந்தார். மென்மையான மனசுக்காரரான சீகன் பாலால் இது போன்ற காட்சிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இறுதியில் மூன்று நாட்களுக்குப் பிறகு படகு ஒன்று கப்பலுக்கு அனுப்பப்பட்டது.
📚அதன் பிறனே சீகன் பால்குவால் கரையேற முடிந்தது. ஆங்கிலேயேர்கள் பொதுவாக தமிழ் கற்க ஆர்வம் காட்டமாட்டார்கள். சீகனுக்கும் அதே எண்ணம்தான். தமிழ் மக்களிடையே பழகப் பழக தமிழ் மொழியின் செழுமையை அறிந்துகொண்டார். அதற்குப் பின்னரே அவருக்கு தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. தமிழ் கற்றால்தான் இங்கு சேவையாற்ற முடியும் என்பதையும் புரிந்து கொண்டார்.
📚தமிழகத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் அவர் தமிழ் கற்க உதவியாக இருந்தனர். மிக விரைவாக தமிழைக் கற்றுத் தேர்ந்த சீகன் பால்குவுக்கு கவர்னர் ஹாஸியஸ் தொடர்ந்து பலவித இன்னல்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்.. ஒரு கட்டத்தில் சீகன் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி, சிறையிலும் அடைத்து வைத்திருந்தார். சுமார் 4 மாத காலம் சிறையில் அவர் காலம் கழித்தார். சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த, சீகன் பால், ‘புதிய ஏற்பாட்’டைத் தமிழில் அச்சடிக்க முடிவு செய்தார். பைபிளில் சொல்லப்பட்ட பல வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தேர்வு செய்வது அவருக்குக் கடும் சவாலாக இருந்தது.
📖அச்சு எந்திரம் கொண்டு வருவதற்கும் எழுத்துகளைக் கோக்கவும் பலவித இன்னல்களைச் சந்தித்தார். ஒரு வழியாக 1713ம் ஆண்டு புதிய ஏற்பாடு அச்சு கோக்கும் பணி தொடங்கியது. சுமார் 2 ஆண்டுக் காலம் இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, 1715ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பணிகள் முடிவடைந்தன. புதிய ஏற்பாடு முழுவதும் தயாராகியிருந்தது. தமிழில் புத்தக வடிவில் முதன்முதலில் வெளிவந்த நூல் ‘புதிய ஏற்பாடு’தான். தமிழில் புத்தகங்கள் அச்சடிக்க அடித்தளம் அமைத்த சீகன் பால்கு 37 வயதிலேயே மரணம் அடைந்தார். தரங்கம்பாடியில் அவர் எழுப்பிய புதிய ஜெருசலேம் ஆலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த ஆலயத்தில் சீகன் பால்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
📚இன்று நாம் பல புத்தகங்களை அச்சு வடிவில் படிப்பதற்குக் காரணமாய் இருந்த சீகன் பால்குவின் நினைவு தினம் இன்றாகும்… தமிழ் தொண்டாற்றிய அவரின் உழைப்பைக் கண்டு வியந்து போகிறேன் வாழ்க அவரது புகழ்..
~(())))~
📚 புத்தகம் பற்றிய பொன்மொழிகள் பின்வருமாறு.!!!
🌹இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்
🌹எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.
🌹தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்
🌹ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி
🌹நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. – மார்க் டிவைன்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் பிராய்டு.
🌹எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன – வால்ட் டிசினி
🌹ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்
🌹ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.
🌹வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.
🌹மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்
🌹புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.
🌹எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா
🌹போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்
🌹உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு
🌹ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். –
சாமுவேல் சான்சன்.
~(()))~
🌹1) வானம் உன் கையில்,
2) உனக்குத்தான் என் இதயம்,
3) சொற்களால் என்னை அடிக்காதே,
4) காலத்தை வென்றவர்கள்,
5) உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்,
போன்ற 5 நூல்களை போட்டாலும்
அதில் நாயா பைசா கூட லாபமில்லை
லாப நஷ்ட கணக்கை பார்ப்பதற்கு நான் வியாபரியும் அல்ல…
அதில் லட்ச கணக்கான
ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும்
எனது லட்சியத்திற்கு முன்பு லட்சங்கள் பெரிதாக என் கண்களுக்கு தெரியவில்லை…
🌹பத்திரிக்கை,
மாத மற்றும் வார இதழ்கள்,
டி.வி சேனல்கள் போலவே
பதிப்பகங்களும் சரி மக்களும் சரி புகழ் வெளிச்சமுள்ள வி.ஐ.பிகள் (சினிமாவில் உள்ள) எழுதிய நூல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் மன்னுரிமை தருவது சமூகத்தின் சாபக்கேடு ஆகும்…
🌹சினிமாவில் பாட்டெழுதிய கவிஞர் ஒருவர் மேடைதோறும் தமிழை உயர்வாக பேசுகிறார்…
ஆனால் அவரின் நூல்கள் மலிவாக கிடைப்பதில்லை
குதிரை விலையாகத்தான் இருக்கும் எல்லாம்..
வியாபார யுக்தி….
தமிழை உயர்த்துவோம் என்று மேடைதோறும் கூறி தமிழால் உயர்ந்தவர்கள்
தழிழால் வாழ்ந்தவர்கள்…
இதை நான்
பொறாமைக்காக குறிப்பிட வில்லை ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
என்பதற்காகவே ஆகும்…
🌹டாக்டர் ஆக வேண்டும் இன்ஜினியர் ஆக வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் போன்ற கனவுகள் ஒருபுறம் இருக்கட்டும் உங்கள் சந்ததிகளுக்கு, குழந்தைகளுக்கு
வாசிக்கும் பழக்கத்தை நேசிக்க கற்றுக்கொடுங்கள்… தேன் போன்று தித்திக்கும் தாய்மொழியான தமிழில் பிழையின்றி பேச,படிக்க, எழுத கற்றுக் கொடுங்கள்
அப்துல் கலாம் அய்யா
கூறியது போல ஒவ்வொரு வீட்டிலும் படுக்கை அறை, பூஜை அறை, சமையல் அறை இருப்பது போல அந்த வரிசையில் நூலகமும் இடம் பெற வேண்டும்…
🌹பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வில் ஒரு மனிதன் சிந்தனையால் தெளிவு பெற்று விட்டால் போதும்,
நாட்டில் சிறைச்சாலைகள்
நிரம்ப வாய்ப்பில்லை,
ஏன்?
சிறைச்சாலைகளே தேவையில்லை,
வீட்டைக்கூட பூட்ட தேவையில்லை,
மூலை முடுக்குகளில்
சிசிடிவி கேமாராவை மாட்ட தேவையில்லை,,
நீதி, நேர்மை, வாய்மை, தூய்மை, உண்மை, உழைப்பு, உயர்வு என்று அனைவரும் அறநெறியில் அன்பு வழியில் செல்வார்கள்,,,
🌹நன்னெறிகளை கற்றக்கொடுக்கும் கல்விச்சாலைகளின்
தரத்தை உயர்த்தினால் மட்டும் போதும் நாட்டில் சிறைச்சாலைகள் தேவையில்லை,,,,
📚ஒரு மனிதன்
உயிரோடு இருக்க சுவாசிப்பு வேண்டும்
அதுபோல உணர்வோடு இருக்க வாசிப்பு வேண்டும்.!!!
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
வெள்ளக்கல்பட்டி, நாமகிரிப்பேட்டை,
நாமக்கல் மாவட்டம்.
7598534851