நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதம்
வரி பாக்கியை வசூல் செய்யச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கும், வார்டு திமுக கவுன்சிலர் உறவினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. நகராட்சி அலுவலகத்திற்கே சென்று ‘என் உறவினரிடம் எப்படி வசூல் செய்யலாம்” என்று வாக்குவாதம் செய்த கவுன்சிலர்.
இந்நிலையில், நகராட்சிக்கு கட்ட வேண்டிய வரி பாக்கியை அவர் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் வரி பாக்கியை வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர். அப்போது, நகராட்சி அதிகாரிகளுக்கும், கடை நடத்தி வருபவதற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உரிய வரி பாக்கியை செலுத்தவில்லை என்றால் குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வெளியேறவதை தடுப்போம்” என அதிகாரிகள் எச்சரித்து வந்ததாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்த 30 வது வார்டு திமுக கவுன்சிலர் லதா, நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
“மார்க்கெட் பகுதிக்கு சென்று எனது உறவினரிடம் எப்படி வரிவசூல் செய்யலாம்” என நகராட்சி ஆணையரிடமும், ஊழியர்களிடமும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.