சென்னையில் தொடக்கவிழா

REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்கவிழா! எங்கே எப்போது?

 REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்கவிழா முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது

இதில் வெற்றி பெறும் அணிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் நடத்தும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டி மார்ச் 6 ஆம் தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு சென்னை தாஜ் கன்னிமரா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. 

 இந்த போட்டிகள் கிழக்கு மண்டலம், குஜராத் மண்டலம், KKG (கேரளா, கர்நாடகா மற்றும் கோவா) மண்டலம், மும்பை சந்தன் ஆர்மர், வடக்கு மண்டலம், ROM (Rest of Maharashtra) மண்டலம், TNAPTS மண்டலம் மற்றும் ராஜஸ்தான் மண்டலம் ஆகிய தேசிய அளவிலான எட்டு அணிகள் மோதுகின்றன. 

ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டியின் தொடக்கவிழாவில் 1983 ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. 

JITO சென்னை சேப்டர் ஜெயின் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் வணிகம், நெட்வொர்க்கிங் மற்றும் சமூக சேவையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published.