கப்பல் ஒரு மாதம் மறைந்திருந்தது ஏன்
மாலத்தீவு சென்றுள்ள சீன கப்பல் ஒரு மாதம் மறைந்திருந்தது ஏன்? இந்தியா என்ன செய்கிறது?
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன ஆராய்ச்சிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 22) மாலத்தீவு சென்றடைந்தது. இந்தக் கப்பல் கடந்த ஒரு மாதமாக இந்தியப் பெருங்கடலில் இருந்தது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தக் கப்பல் குறித்து இந்தியா முன்னர் கவலை தெரிவித்திருந்ததுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலை நிறுத்த மறுக்கும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது.
மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் சுமார் ஒரு மாத காலம் கழித்து அந்தக் கப்பல் பிப்ரவரி 22 அன்று மாலே அருகே காணப்பட்டது.
மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு, முய்சு இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. அவர் சமீபத்தில் சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
மாலத்தீவு குறித்து இந்தியாவின் கவலை
மாலத்தீவு இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து 300 கடல் மைல் தொலைவில் உள்ளது, அதே சமயம் இந்தியாவின் லட்சத்தீவு குழுமத்தின் மினிகாய் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் உள்ளது.
மாலத்தீவுகள் சீனாவின் பக்கம் சாய்வது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயம். ஜனாதிபதியான பிறகு, தனது அனைத்து படைகளையும் திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் முய்சு கேட்டுக் கொண்டார், ஆனால் சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் ஒரு தளத்தில் இருந்தும், மே 10-ஆம் தேதிக்குள் மீதமுள்ள இரண்டு தளங்களில் இருந்தும் இந்திய ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று கூறியது.
மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை (எம்.என்.டி.எஃப்), “இந்தியா மற்றும் இலங்கை கப்பல்கள் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ‘தோஸ்தி-16’ என்ற மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதை வரவேற்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பயிற்சியில், மூன்று நாடுகளின் ராணுவத்தினரிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், கடலில் நடக்கும் சம்பவங்களை கூட்டாக கையாள்வதற்கான வழிகளை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,”