பிரதமர் என்ன செய்தார்?

வங்கப் பஞ்சம்: 30 லட்சம் பேர் பலியான போது அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் என்ன செய்தார்?

1943 ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் கிழக்கு இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலிகொண்டது. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் தரப்பில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்களின் உயிரிழப்பு ஏற்பட்ட மிக மோசமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.

‘பசி எங்களைத் துரத்தியது’

வங்காள பஞ்சத்தின் போது உணவுக்காக மக்கள் வேறு வழிதெரியாமல் மேற்கொண்ட பல நடவடிக்கைகளை விவரிக்கிறார் பிஜோய்கிருஷ்ணா திரிபாதி.அவருக்கு தனது உண்மையான வயது தெரியவில்லை. ஆனால் அவரது வாக்காளர் அட்டையின்படி அவருக்கு வயது 112. பேரழிவை நினைவில் வைத்திருக்கும் ஒருசிலரில் பிஜோய்கிருஷ்ணாவும் ஒருவர்.

அவரது வீட்டின் வராண்டாவில் அமர்ந்தபடி அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தனர் அவரது குடும்பத்தின் நான்கு தலைமுறையினர். சைலேன் சர்க்காரும் அப்போது உடனிருந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாக வங்காளத்தின் கிராமப்புறங்களில் பயணம் செய்து, பேரழிவை ஏற்படுத்திய பஞ்சத்தில் இருந்து தப்பியவர்களிடமிருந்து நேரடியாக விவரங்களை சேகரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.