தனுஷ் பெருமிதம்
தனுஷின் 50 வது படமாக ராயன் தயாராகியுள்ளது. இதனை தனுஷே இயக்கி, நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக்கில், தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.ராயனில் நித்யா மேனன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர். சில தினங்கள் முன்பு எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ், அவருடன் பணிபுரிந்தது சந்தோஷமளித்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், செல்வராகவனின் பழைய ஸ்கிரிப்டை, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி தனுஷ் ராயனை எடுத்திருப்பதாக செய்தி வெளியானது. இதனை மறுத்த செல்வராகவன், ராயன் முழுக்க தனுஷின் கனவு ஸ்கிரிப்ட். அதன் உருவாக்கத்தில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை என தெளிவுப்படுத்தினார்
ற்போது, ராயன் படத்தில் செல்வராகவனின் கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் தனுஷ், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷை அறிமுகப்படுத்தி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் அவருக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்ததில் செல்வராகவனின் பங்கு முக்கியமானது. நம்பிக்கைக்குரிய இயக்குநராக இருந்த செல்வராகவன் இப்போது அந்த இடத்திலிருந்து விலகி, முழுநேர நடிகராகிவிட்டார். ராயனில் படியவாரியத் தலை, நெற்றியில் திருநீறு, கவிழ்த்துப் போட்ட சி வடிவ மீசை, நாலுநாள் வெண்தாடி என்று புதிய தோற்றத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.