முதன்முறையாக தமிழ்நாட்டையே நெளிய செய்த சேலம்
சேலம் மாவட்ட நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, ஒட்டுமொத்த தமிழகத்தையுமே திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. யார் இந்த 2 திருநங்கைகள்?
நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகிறது.. வடமாநிலங்களில்தான் இப்படி ஒரு கொடுமைகள் நடந்து வருகிறதென்றால், நம்முடைய தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு துயரம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியை சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 16 வயதுதான் ஆகிறது.. அங்கிருக்கும் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறான்.. வாரத்துக்கு ஒருநாள், இந்த சிறுவனுக்கு ஓட்டலில் லீவு தருவார்கள். அந்த ஒரு நாள் லீவில், தன்னுடைய நண்பர்களுடன் விளையாடுவான் இந்த சிறுவன்.
இப்படித்தான் கடந்த 2022, ஜூலை மாதம், விளையாட போன சிறுவன், மிகுந்த சோர்வுடனும், களைப்புடனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.. அவனது கோலத்தையும், முகத்தையும் பார்த்ததுமே சிறுவனின் பெற்றோர்கள் பதறிப்போய் விட்டார்கள். இதனால் மகனிடம் என்ன நடந்தது என்று தீவிரமாக விசாரித்தார்கள். அப்போதுதான், சிறுவன் அழுதுகொண்டே நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னான்.
இதற்கு பிறகுதான், சிறுவனின் அம்மா போலீசுக்கு போய்விட்டார்.. காக்காபாளையம் போலீசில் இதுதொடர்பான புகார்களை தரவும், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இறுதியில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகளான கார்த்திக்(எ) காயத்ரி (26), முல்லை (25) ஆகியோரை கைது செய்தனர்..
பின்னர் இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்திலும் நடந்து வந்தது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, திருநங்கைகளான காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக தீர்ப்பு சொல்லி உள்ளார்.. இவர்கள் 2 பேரையும் போலீசார் கோவை பெண்கள் சிறைக்கு கொண்டு சென்றனர்