தொழிலதிபர்களுக்கு அழைப்பு
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு, 4 மாதங்களுக்கு முன்பே முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமணம் வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான திருமண கொண்டாட்டங்கள், குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், உலக பணக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
அவர்களை வரவேற்கும் விதமாக குஜராத்தின் கட்ச் நகரில் பிரத்யேக துப்பட்டாக்கள் தயாராகி வருகின்றன. அதை நீட்டா அம்பானி நேரில் சென்று பார்வையிட்டார். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரு மாநில பாரம்பரிய முறைபடி பட்டாண் துப்பட்டாக்கள் உருவாக்கப்பட்டு வருவதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.