இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் 68 பேர் பலி
காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவில் காசாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் விமானப்படையினர் இடைவிடாமல் குண்டு மழை பொழிந்தனர்.
இதில், ரஃபா(Rafah) நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கான் யூனிஸ் நகரில் 7 பேரும், முவாசி நகரில் 6 பேரும் என ஒரே நாளில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேல் நீடித்து வரும் நிலையில், காசாவில் இதுவரை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.